ADDED : நவ 18, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்சாரி, 80. இவரது வீட்டின் கீழ் தளத்தில் டீ கடை உள்ளது. மேல் தளத்தில் உள்ள ஓட்டு வீட்டில், பழைய பொருட்களை வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை ஓட்டு வீட்டில் இருந்து புகை வந்தது. அப்பகுதி மக்கள் ராம்சாரிக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பழைய பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

