/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ; பிளாஸ்டிக் கழிவு குடோன் நாசம்
/
பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ; பிளாஸ்டிக் கழிவு குடோன் நாசம்
பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ; பிளாஸ்டிக் கழிவு குடோன் நாசம்
பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ; பிளாஸ்டிக் கழிவு குடோன் நாசம்
ADDED : பிப் 17, 2024 07:13 AM
சேலம் : சேலம், உடையாப்பட்டி, குண்டுக்கல்லுாரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.
அங்கு நேற்று பண்டிகை கொண்டாடப்பட்டது. மதியம், 12:40 மணிக்கு நடந்த அம்மன் பூஜையின் போது ராக்கெட் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதில் ஏற்பட்ட தீப்பொறி, அருகே பாலமுரளி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குடோனுக்குள் விழுந்தது. இதில் நைலான் கயிறு தயாரிக்க குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதை அறிந்து மதியம், 1:00 மணிக்கு, அங்கு வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 2:00 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.