/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் கசிவால் தீ: குடிசை வீடு நாசம்
/
மின் கசிவால் தீ: குடிசை வீடு நாசம்
ADDED : ஆக 25, 2025 03:49 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், கோணகாபாடி ஊராட்சி திருவாத்தான்கொரையை சேர்ந்த கூலித்தொழிலாளி பெருமாள், 60. இவரது மூத்த மகன் முனுசாமி, மனைவியுடன் தனியே குடிசை வீட்டில் வசித்தார்.
அந்த வீடு நேற்று மதியம், 1:00 மணிக்கு தீப்பற்றி எரியத்தொடங்-கியது. அக்கம் பக்கத்தினர் பார்த்து கூச்சலிட, உள்ளே இருந்த தம்-பதியர், வெளியே ஓடிவந்தனர். பின் மக்கள், ஓமலுார் தீய-ணைப்பு துறைக்கு தகவல் அளித்து, வீட்டில் இருந்த சில பொருட்களை மட்டும் மீட்டனர். அங்கு வந்த நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மின் கசிவால் தீப்பற்றி இருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். மேலும் வீட்டில் இருந்த, 10,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்ததாக, வருவாய்த்துறையினர் தெரிவித்-தனர்.

