/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீயணைப்பு கருவி; அறிக்கை கேட்கும் டி.ஆர்.ஓ.,
/
தீயணைப்பு கருவி; அறிக்கை கேட்கும் டி.ஆர்.ஓ.,
ADDED : ஏப் 29, 2025 02:04 AM
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தலைமையில், சட்டம் -- ஒழுங்கு கூட்டம் நேற்று நடந்தது.
அதில் போலீஸ் தரப்பில், 'சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள தீயணைப்பு கருவிகள் எதுவும் உபயோகத்தில் இல்லை. அதை இயக்குவதற்கான பயிற்சி பெற்ற பணியாளர்கள் கூட, மருத்துவமனையில் கிடையாது. அதனால் சமீபத்தில் ஏற்பட்ட மின் விபத்தை உடனடியாக கட்டுப்
படுத்த முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டது' என்றனர். மேலும், சேலம் புது பஸ் ஸ்டாண்டில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாகிவிட்டதால், பயணிகளுக்கு தொடர்ந்து, இடையூறு நிலவுகிறது. சேலம் மாநகரின் பல இடங்களில், பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்கூடம் இல்லாத காரணத்தால், பயணிகள் சாலையோரமாக பாதுகாப்பற்ற சூழலில் காத்திருக்க வேண்டி இருப்பதால் விபத்துக்கு வழிவகுக்கிறது என தெரிவித்தனர்.
நிறைவாக டி.ஆர்.,ஒ., ரவிக்குமார் பேசுகையில், ''தீயணைப்பு கருவிகள் இயக்க, 10 லட்ச ரூபாய் செலவாகும் என்றால், அது குறித்த அறிக்கை தாக்கல் செய்தால், அரசுக்கு பரிந்துரைத்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். புது பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, இரண்டொரு நாளில் ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

