/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தோட்டத்தில் தீப்பிடித்து வைக்கோல் கட்டு நாசம்
/
தோட்டத்தில் தீப்பிடித்து வைக்கோல் கட்டு நாசம்
ADDED : நவ 03, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:கெங்கவல்லி, செந்தாரப்பட்டி, பில்லங்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ், 40. இவரது தோட்டத்தில் வைத்திருந்த வைக்கோல் கட்டுகள் நேற்று மதியம், 2:00 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த ரமேஷ், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
மதியம், 2:30 மணிக்கு, அங்கு தீயணைப்பு வீரர்கள் சென்றனர்.
ஆனால், தீப்பற்றிய இடத்துக்கு வாகனம் செல்ல முடியாத நிலை இருந்ததால், அங்குள்ள தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து, தீயை அணைத்தனர். இருப்பினும், 20க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமாகின. தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

