/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் தீ விபத்து ரூ.2 லட்சத்துக்கு பொருட்சேதம்
/
வீட்டில் தீ விபத்து ரூ.2 லட்சத்துக்கு பொருட்சேதம்
ADDED : டிச 31, 2025 05:22 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி செல்வி, 60. நேற்று முன்தினம், கண் பரிசோ-தனை செய்ய காமராஜ் மருத்துவமனைக்கு சென்றார். தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, உணவு வாங்க, செல்வி வெளியே சென்றார். சிறிது நேரத்தில், வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது.
மக்கள் தகவல்படி, விரைந்து வந்த, செவ்வாய்ப்-பேட்டை தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்-தனர். இதில், பீரோ, அதில் இருந்த, 50,000 ரூபாய், 'டிவி', டேபிள் என, 2 லட்சம் ரூபாய்க்கு பொருட்-சேதம் ஏற்பட்டது. மின் கசிவால் தீ விபத்து ஏற்-பட்டதா, வேறு காரணமா என, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

