/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரும்பு குடோனில் தீ; பொருட்கள் நாசம்
/
இரும்பு குடோனில் தீ; பொருட்கள் நாசம்
ADDED : ஏப் 28, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், பாத்திமா நகரை சேர்ந்தவர் ஜான்பாஷா, 59. சன்னியாசிகுண்டு பிரதான சாலை பகுதியில், பழைய இரும்பு குடோன் வைத்துள்ளார். அங்கு நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு கரும்புகை வெளியேறியது. மக்கள் தகவல்படி செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.
இதில் பிளாஸ்டிக் பொருட்கள், பழைய மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை எரிந்தன. 5 மணி நேரத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிச்சிப்பாளையம் போலீசார் முதல்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதும், ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

