ADDED : ஜூலை 06, 2026 01:15 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், அந்தேரிப்பட்டியை சேர்ந்தவர் மனோ-கரன், 55. அதே பகுதியில் உள்ள தேசிய புனரமைப்பு காலனி, குப்பைமேடு அருகே, பெயின்டிங் பட்டறை வைத்துள்ளார். நேற்று பட்டறை மூடப்பட்டிருந்தது. ஆனால் மாலை, 5:40 மணிக்கு பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறியபடி தீப்-பற்றி எரிந்தது.
இதை அறிந்து, செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்-தனர். இப்பணியில் மக்களும் இணைந்து, தீயை கட்டுப்படுத்-தினர். இதில் இரும்பு ரேக்கில் அடுக்கி வைத்திருந்த பெயின்ட் டப்-பிகள், ஓடுகளால் வேயப்பட்ட பட்டறை மேற்கூரையின் மரச்சட்-டங்கள் எரிந்து சேதமாகின. கிச்சிப்பாளையம் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
