/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை
/
ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை
ADDED : அக் 29, 2024 07:19 AM
சேலம்: ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதை தடுக்க, உட-மைகள் சோதனை செய்யப்படுவதால், பயணிகள் முன்கூட்டியே ஸ்டேஷன்களுக்கு வர வேண்டும்.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:தீபாவளி பண்டிகையை, பட்டாசு வெடித்தும், தீபம் ஏற்றியும் வழிபடுவது வழக்கம். ஆனால், இவற்றை கவனமாக கையாளாத போது, மகிழ்ச்சிக்கு பதில், வலியும் வேதனையும் தந்துவிடும். பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, ரயில்-களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயில்களில், பட்டாசுகளால் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே, சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஸ்டேஷன்களில், ரயில்வே பாது-காப்பு படையினர் மற்றும் ரயில்வே
அலுவலர்கள், பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். ஆகவே, பயணிகள் முன்-கூட்டியே ரயில் நிலையங்களுக்கு வந்து, பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது, சிறை உள்-ளிட்ட கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

