/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1 லட்சம் மதிப்பு பட்டாசு பறிமுதல்
/
ரூ.1 லட்சம் மதிப்பு பட்டாசு பறிமுதல்
ADDED : செப் 27, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்பூர்,
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனுார் ஒன்றியம், துத்திபட்டு கிராமத்தில், மதன் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக, ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று அதிகாலை போலீசார், அன்பு என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 146 பெரிய பட்டாசு பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்து உம்ராபாத் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அன்புவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.