/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதையில் வாகனம் ஓட்டிய தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
/
போதையில் வாகனம் ஓட்டிய தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
போதையில் வாகனம் ஓட்டிய தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
போதையில் வாகனம் ஓட்டிய தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 06, 2025 10:50 PM
கெங்கவல்லி:போதையில் வாகனம் ஓட்டிய, தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, உடையார்பாளையத்தில், ஒரு வீட்டில் பாம்பு புகுந்ததாக, நேற்று முன்தினம், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில், ஏழு பேர், தீயணைப்பு வாகனத்தில் சென்றனர்.
நாவலுாரை சேர்ந்த, தீயணைப்பு வீரர் சுபாஷ் சந்திரபோஸ், 35, அந்த வாகனத்தை ஓட்டினார். கூடமலை, கவுண்டம்பாளையத்தில் சென்றபோது, டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதியது. இதில், தீயணைப்பு வாகனம், டிராக்டர் சேதமடைந்தது.
விசாரணையில், சுபாஷ் சந்திரபோஸ் மது போதையில் இருந்ததும், அதிவேகத்தில் சென்றதால் விபத்து ஏற்பட்டதும் தெரிந்தது. இதனால் அவரை, சஸ்பெண்ட் செய்து, சேலம் தீயணைப்பு கோட்ட அலுவலர் மகாலிங்கம், நேற்று உத்தரவிட்டார்.