ADDED : ஆக 19, 2026 05:45 AM
பனமரத்துப்பட்டி:சேலம்
தெற்கு கோட்ட மின்வாரியம் சார்பில் வீரபாண்டி துணை மின் நிலையத்தில்,
மின் பாதுகாப்பு, தீ தடுப்பு பயிற்சி, மருத்துவ முகாம் நேற்று
முன்தினம் நடந்தது. சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்
குணவர்த்தினி தலைமை வகித்தார். சேலம் தெற்கு செயற்பொறியாளர்
அன்பரசன் முன்னிலை வகித்தார்.
பனமரத்துப்பட்டி, மல்லுார்,
ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, இளம்பிள்ளை, கே.கே.,நகர்,
வேம்படிதாளம், பெருமாகவுண்டம்பட்டி, இடங்கணசாலை, அரியானுார்
உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள், எலக்ட்ரீஷியன்கள்,
அமைப்பாளர்களுக்கு, பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை
பயன்படுத்தல், தீ விபத்தை நிவர்த்தி செய்யும் முறை குறித்து நேரடி
செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு கண்
பரிசோதனை, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள்
செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 150க்கும்
மேற்பட்டோர் பயன் அடைந்தனர். உதவி செயற்பொறியாளர் சத்தியமாலா,
உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
