/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் 15 இடங்களில் பட்டாசுகள் விற்பனை

ADDED : அக் 17, 2025 01:45 AM
சேலம், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி இணை பதிவாளர் பாலமுருகன் கூறியதாவது:-
பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் சேலம் மாவட்டம் முழுதும், 15 இடங்களில் பட்டாசு விற்கப்படுகிறது. 2 கோடி ரூபாய் அளவில், 'ஸ்டேண்டர்ட்' உள்பட, 7 நிறுவனங்களில் இருந்து, நேரடியாக சிவகாசியில் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது.
பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள், அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மண்டப கட்டட வளாகம், எம்.டி.எஸ்., நகர், பண்டக சாலையின் சத்திரம் தலைமையிடம், புற நகர் பகுதிகளில் மேட்டூர், கொளத்துார், இடைப்பாடி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, தாரமங்கலம், ஆத்துார் ஆகிய இடங்களில், பொன்னி கூட்டுறவு பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனால் கூட்டுறவு பண்டகசாலை மூலம், நியாய முறையில் விற்கப்படும் அனைத்து வகை பட்டாசுகள் மட்டுமின்றி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், 'ஸ்மார்ட் சிட்டி' வணிக வளாகத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு உணவகம் மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகளை, மக்கள் வாங்கி தீபாவளியை கொண்டாட கேட்டுக்கொள்கிறோம்.