/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் செத்து மிதந்தன
/
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் செத்து மிதந்தன
ADDED : அக் 31, 2025 12:51 AM
மேட்டூர், மேட்டூர் அணை, 16 கண் மதகில் கடந்த, 27 இரவு உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள ஏராளமான குட்டைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஒரு குட்டையில் தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கி நின்றது. அந்த குட்டையில் இருந்த அரைஞ்சான், பஞ்சலை என, ஒரு டன் மீன்கள் வரை செத்து மிதந்தன.
தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்கள், குட்டையில் உள்ள நீரை ஆய்வு செய்ய நேற்று முன்தினம் எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து நேற்று மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'மீன்கள் சுவாசிக்க ஒரு லிட்டர் நீரில், 3 முதல், 5 மைக்ரோகிராம் ஆக்சிஜன் இருக்க வேண்டும். மீன்கள் செத்த குட்டையில்,  அதிகபட்சம், 1.5 மைக்ரோ கிராம் ஆக்சிஜன் மட்டும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இதனால் மீன்கள் இறப்புக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என உறுதியாகியுள்ளது' என்றனர்.

