/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்
/
உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்
உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்
உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்
ADDED : ஜூலை 30, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து நேற்று மதியம் பாசனம் மற்றும் உபரியாக, 1.10 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதில், 92,000 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியே சென்று காவிரியாற்றில் கலக்கிறது.
நேற்று மதியம் உபரிநீர் பெருக்கெடுத்து செல்லும் காவிரியாற்றில், சின்னகாவூர் அருகே சில மீனவர்கள், துாண்டில் மற்றும் வலைவீசி மீன் பிடித்தனர். அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், தம்பதியர், மொபைலில், 'செல்பி' எடுத்தனர்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர், மீனவர்கள், மக்களை எச்சரித்து, காவிரி கரையோரத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.