/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4ம் ரக மீன் விலை குறைக்க முடிவு கருத்து கேட்பில் மீனவர்கள் எதிர்ப்பு

ADDED : டிச 28, 2024 02:32 AM
மேட்டூர்: மேட்டூர் அணையில் மீன் பிடிக்க, 2016 மீனவர்கள் உரிமம் பெற்-றுள்ளனர். இதில், 1,400 பேர், ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்-கின்றனர். மீனவர்கள் பிடிக்கும் மீன்களை, மேட்டூர் மீனவர் கூட்-டுறவு சங்கத்தில் விற்க வேண்டும். அங்கு முதல் ரகம், 2, 3, 4ம் ரகங்கள் முறையே, 140, 120, 100, 80 ரூபாய் என கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 4ம் ரக திலேப்பியா மீன்கள் விலையை குறைத்து கொள்முதல் செய்ய மீன்துறை முடிவு செய்தது.
இதுதொடர்பாக கருத்து கேட்பு கூட்டம், சங்கத்தில் நேற்று நடந்-தது. மீன்துறை துணை இயக்குனர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். அதில் பெரும்பாலான மீனவர்கள், விலை குறைத்து கொள்முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதவி இயக்குனர் ரத்தினம்(பொ), சார் - பதிவாளர் கீதா, செயலர் செல்வராஜ், 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். முடிவு எட்டப்படாததால், மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்-தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.