/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழக எல்லையில் வறட்சி ஆடு வளர்க்கும் மீனவர்கள்
/
தமிழக எல்லையில் வறட்சி ஆடு வளர்க்கும் மீனவர்கள்
ADDED : பிப் 14, 2024 11:08 AM
மேட்டூர்: மேட்டூர் அணை, 142 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்று, 65.97 அடியாக இருந்தது. நீர்வரத்து வெகுவாக சரிந்ததால் தமிழக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் காவிரி, அதன் துணையாறுகளில் ஒன்றான பாலாறு சங்கமிக்கும் பகுதி வறண்டுவிட்டது. இதனால் நேற்று காவிரியில் வினாடிக்கு, 43 கன அடி நீர் மட்டும் வந்தது.
வழக்கமாக மேச்சேரி ஒன்றியம் கீரைக்காரனுார், கூணான்டியூர் கிராம மீனவர்கள், பாலாறு வனப்பகுதியில் முகாமிட்டு மீன் பிடிப்பர். தற்போது அணை நீர்மட்டம், நீர்வரத்து குறைந்ததால் அப்பகுதியில் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலுக்கு பதில் வெள்ளாடுகளை வளர்க்க தொடங்கியுள்ளனர்.

