/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டதாரி வாலிபர் மூளைச்சாவு 5 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு
/
பட்டதாரி வாலிபர் மூளைச்சாவு 5 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு
பட்டதாரி வாலிபர் மூளைச்சாவு 5 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு
பட்டதாரி வாலிபர் மூளைச்சாவு 5 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு
ADDED : ஜூன் 16, 2025 03:14 AM
சேலம்: திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம் அருகே காந்திபுரத்தை சேர்ந்த பழனியப்பன்- அன்னபூரணி தம்பதி மகன் சேதுபதி, 29; பி.காம்., பட்டதாரி. விவசாய தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி பூர்ணிமா, ஒரு மாதமேயான ஆண் குழந்தை உள்ளது.
கடந்த, 11ல் சேதுபதி, காந்திபுரத்தில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்கு கோவையில் சேர்த்தனர். 13ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர், மனைவி சம்மதம் தெரிவித்தனர்.
அவரது இருதயம், கண்கள், கல்லீரல், சிறுநீரகம், இதய வால்வுகள் எடுக்கப்பட்டு, சென்னை, கோவை, ஓசூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்ட்டது. இதன் மூலம் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர். சேதுபதி உடலுக்கு, மருத்துவமனை டீன் தேவிமீனாள் உள்ளிட்ட மருத்துவர்கள் மரியாதை செலுத்தி நேற்று காலை உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.