/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளம்; நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளம்; நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை
திருமணிமுத்தாற்றில் வெள்ளம்; நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை
திருமணிமுத்தாற்றில் வெள்ளம்; நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை
ADDED : டிச 04, 2024 07:01 AM
சேலம்: கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து, திருமணிமுத்தாறு பாதுகாப்பு அறக்கட்டளையினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
சேலத்தில் கடந்த, 4 நாட்களாக தொடர் மழை பெய்ததால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்புகின்றன. நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக ஏற்காடு மலையில் இருந்து அதிகளவில் மழைநீர் திருமணிமுத்தாற்றில் கலந்ததால், நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரின் மையத்தில் ஓடும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களை மூழ்கடித்தும், சற்று உயர்வாக உள்ள பாலங்களை தொட்டபடியும் கரை புரண்டோடியது. குறிப்பாக உத்தமசோழபுரம், பூலாவரி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரைகளை தாண்டி, கரையோர தென்னந்தோப்புகள், வயல்வெளிகளில் மழைநீர் வழிந்தோடியது. இதை பார்த்த பலர், சிறு வயதில் பார்த்த, 'பழைய திருமணிமுத்தாறு' என கூறினர். பலர் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
சேலத்தில் திருமணிமுத்தாறு பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், மணிமுத்தாற்றை சுத்தம் செய்து காப்பாற்ற வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன் ஆரத்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது. கடந்த, 19 ஆண்டுகளாக இல்லாதபடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும்படி, சேலம் திருமணிமுத்தாறு பாலம் அருகே, நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வீரபத்திரனாந்தபுரி சுவாமிஜி தலைமையில் அறங்காவலர் கோபிநாத் முன்னிலையில் பூஜை நடத்தி மலர் துாவி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள், மஞ்சள், குங்குமம், மலர் துாவி நதியை வரவேற்றனர்.