/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளத்தில் சிக்கியவர் பத்திரமாக மீட்பு
/
வெள்ளத்தில் சிக்கியவர் பத்திரமாக மீட்பு
ADDED : டிச 04, 2024 02:00 AM
மேட்டூர், டிச. 4-
மழையால், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, தொப்பையாறு அணை நேற்று நிரம்பியது. காவிரி துணையாறுகளில் ஒன்றான இது, தொப்பூர், கைகாட்டி வெள்ளாறு வழியே சென்று காவிரியாற்றில் கலக்கும். அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 முதல், 1,250 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றியதால் நேற்று மதியம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த கம்மம்பட்டியை சேர்ந்த அர்ஜூன், 27, தொப்பையாறு நடுவே உள்ள புதரில் அமர்ந்திருந்தார். அப்போது வந்த வெள்ளம் இருபுறத்தையும் சூழ்ந்து, புதர் இருந்த பகுதி தீவாக மாறியது. அங்கு சிக்கிய அர்ஜூன் வெளியேற முடியாமல் தவித்தார். உடனே மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் குழுவினர், நேற்று காலை அங்கு சென்றனர். தொடர்ந்து கயிறு கட்டி ஆற்றின் நடுவே சென்று, அர்ஜூன் உடலில் கயிற்றை கட்டி, 2 மணி நேரத்துக்கு பின் அவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.