/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு
/
வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 07, 2024 07:09 AM
ஓமலுார்: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை அடுத்த, ஏற்காடு அடிவாரப்-பகுதியான உள்கோம்பையில் மேற்கு சரபங்கா ஆறு, ஓமலுார், சக்கரைசெட்டிப்பட்டியில், ஏற்காடு அடிவாரப்பகுதியான குறுமிச்-சங்கரட்டில் கிழக்கு சரபங்கா ஆறும் உற்பத்தியாகிறது. கடந்த, 2 இரவு ஏற்காடு, காடையாம்பட்டி, ஓமலுார் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேற்கு,
கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்-பெருக்கு ஏற்பட்டது. இதில் கால்வாய் ஓரம் இருந்த விளை நிலங்கள் மூழ்கின.
சாலைகள் சேதமடைந்தன.இதனால் பாதிப்பு குறித்து, நீர்வள பொதுப்பணித்துறை அதிகா-ரிகள், இரு நாட்களாக ஆய்வு செய்கின்றனர். நேற்று
காமலாபு-ரத்தில், மேட்டூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசாந்தும், சக்கரைசெட்டிப்பட்டி,
அணைமேடு, தெசவிளக்கு பகுதிகளில், சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த கிழக்கு சரபங்கா உதவி செயற்பொறியாளர்
ராஜாராம், உதவி பொறியாளர் ரஞ்சிதாவும் ஆய்வு செய்தனர். இருப்பினும் நீர்வ-ரத்து நின்றால் மட்டுமே பாதிக்கப்பட்ட
இடங்களை முழுமை-யாக கண்டறிய முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.