/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
/
சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
ADDED : அக் 14, 2024 04:53 AM
சேலம்: சேலம் மாநகரில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இரு நாட்களுக்கு முன் பெய்த மழையால் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி, சிவதாபுரம் உள்ளிட்ட சுற்-றுவட்டார பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
அந்த தண்ணீர் வடியும் முன் நேற்று மாலை, 4:00 மணிக்கு மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையால், மாநகரின் பல்-வேறு பகுதி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கிச்-சிப்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட், வள்ளுவர் சிலை, நேரு கலையரங்கம், புது பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லுாரி சாலை உள்-ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பலர், வாகனங்களை இயக்க முடியாமல் பரிதவித்தனர்.