/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழ் புத்தாண்டால் பூ, பழம் விற்பனை அமோகம்
/
தமிழ் புத்தாண்டால் பூ, பழம் விற்பனை அமோகம்
ADDED : ஏப் 14, 2025 06:36 AM
சேலம்: தமிழ் புத்தாண்டு, சித்திரை பிறப்பையொட்டி, கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும்பாலான பகுதி மக்கள், வீடுகள்தோறும் சுவாமி அறையில் பெரிய கண்ணாடி முன், தட்டுகள், நிறைய பழங்கள், பூக்களை வைத்து அதில் கண் விழித்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் நேற்று, சேலம், சின்னக்கடை வீதியில் உள்ள பழக்கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறு என்பதால், காலை முதலே மக்கள் கூட்டம் காணப்பட்டது. அதேபோல் வ.உ.சி., பூ மார்க்கெட்டிலும், பூக்கள் விலை சற்று அதிகரித்தபோதும், விஷூக்கனி தரிசன பூஜைக்கு பலரும் பூக்களை வாங்கி சென்றனர்.
மாம்பழம் கிலோ, 150 முதல், 250 ரூபாய்; பலாப்பழம், 200 முதல், 250 ரூபாய், வாழைப்பழம் சீப்பு, 100 முதல், 150 ரூபாய் வரை விற்பனையானது. சாமந்தி பூக்கள் கிலோ, 250 முதல், 280 ரூபாய், ரோஜா, 200 முதல், 250; மல்லிகை, 600 முதல், 700 ரூபாய்க்கு விற்பனையானது. மக்கள் ஆர்வத்துடன் பழங்கள், பூக்களை வாங்க கூடியதால் சின்னக்கடை வீதியில் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர்.

