ப.வேலுார்: பரமத்தி வேலுார் தாலுகா பகுதியில் உள்ள பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, செவ்வந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகு-படி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
சில வாரங்களாக விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. சுப-முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷம் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலையும் உயர்ந்துள்-ளது.ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்தில், ஒருகிலோ குண்டுமல்லி, 1,600 ரூபாய், சம்பங்கி, 140 ரூபாய், அரளி, 100 ரூபாய், செவ்வந்தி, 350 ரூபாய், முல்லை, 1,000 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது. இதனால், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.