/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபத்திருவிழாவால் பூக்கள் விலை உயர்வு
/
தீபத்திருவிழாவால் பூக்கள் விலை உயர்வு
ADDED : டிச 14, 2024 03:00 AM
சேலம்: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் நேற்று, பூக்கள் வாங்க வாடிக்கையாளர்கள், வியா-பாரிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.
பனி தாக்கத்தால் பூக்கள் வரத்து குறைவு, தீபத்திருவிழாவுக்கு தேவை அதிகரிப்பால், பூக்கள் விலை உயர்ந்தது. கடந்த, 6ல் கிலோ, 800க்கு விற்ற மல்லி, நேற்று விலை உயர்ந்து, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் 700க்கு விற்ற முல்லை, 750; 400க்கு விற்ற ஜாதி-மல்லி, 480; 240க்கு விற்ற கலர் காக்கட்டான், 300; 120க்கு விற்ற மலை காக்கட்டான், 200 ரூபாயாக உயர்ந்தது. 200க்கு விற்ற அரளி, வெள்ளை அரளி தலா, 300; 260க்கு விற்ற மஞ்சள் அரளி, செவ்வரளி தலா, 400; 220க்கு விற்ற ஐ.செவ்வரளி, 320; 50க்கு விற்ற நந்தியாவட்டம், 80 ரூபாயாக உயர்ந்தது.