/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பறக்கும் படை சோதனை 3 மருந்தகங்களில் விதிமீறல்
/
பறக்கும் படை சோதனை 3 மருந்தகங்களில் விதிமீறல்
ADDED : ஜூலை 23, 2025 02:24 AM
சேலம், கோவை பறக்கும் படையை சேர்ந்த மருந்து ஆய்வாளர்கள் ராமசாமி, பிரபு தலைமையில் குழுவினர், நேற்று முன்தினம், சேலத்தில் உள்ள மருந்து கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சூரமங்கலம், பாரதி மருந்து கடையில், மருந்தாளுனர் இல்லாததோடு, மருந்து சீட்டு பதிவேடு பராமரிக்காதது, ரசீது இல்லாமல் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் பறக்கும் படையை சேர்ந்த ராஜேஷ், உமாமகேஸ்வரி தலைமையில் குழுவினர், நாமக்கல் சரகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் டவுனில் உள்ள, ஸ்ரீ மெடிக்கல் ஷாப்பில் மருந்தாளுனர் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் சேலம், அய்யம்பெருமாம்பட்டி, பெரியார் நகரில், ஸ்ரீமுருகன் மெடிக்கல் ஷாப்பில் மருந்து சீட்டு பதிவேடு பராமரிக்காதது, ரசீது இல்லாமல் விற்றது தெரிந்தது. இதனால், 3 கடைகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றினர்.
இதுகுறித்து குழுவினர் கூறுகையில், 'வலி நிவாரணி, ஆன்டிபயாடிக், ஆன்டி எபிலெப்டிக், அபார்ஷன் கிட், நார்கோடிக் மருந்துகள் உள்ளிட்டவற்றை, முறைகேடாக கொள்முதல் செய்து ரசீது இன்றி கூடுதல் விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், இயக்குனர் உத்தரவுப்படி மேல் நடவடிக்கை தொடரும்' என்றனர்.