/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தானியம், பருப்புகளில் கலப்படம் உணவுத்துறை சோதனையில் 'திடுக்'
/
தானியம், பருப்புகளில் கலப்படம் உணவுத்துறை சோதனையில் 'திடுக்'
தானியம், பருப்புகளில் கலப்படம் உணவுத்துறை சோதனையில் 'திடுக்'
தானியம், பருப்புகளில் கலப்படம் உணவுத்துறை சோதனையில் 'திடுக்'
ADDED : ஜூன் 24, 2025 01:15 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த சோதனையில் கலப்படம், தரமற்ற, சட்டவிதிகள் மீறிய தப்பு குறியீடு போன்ற, 390 உணவு மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் போலியான, உணவுக்கு ஒவ்வாத, கேடு விளைவிக்கக்கூடியது, தடை செய்யப்பட்டது என கண்டறியப்பட்டு, சேலம் டி.ஆர்.ஓ., நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிவில் பிரிவின் கீழ் பதியப்பட்ட, 27 வழக்குகளில், 18 வழக்குகளுக்கு மொத்தம், 2.10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, டி.ஆர்.ஓ., ரவிக்குமார் சமீபத்தில் உத்தரவிட்டார். அவற்றில் அதிகபட்சமாக, தானியம் மற்றும் பருப்பு வகைகள் சார்ந்த ஆறு வழக்கில், 50 ஆயிரம் ரூபாய், பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் தொடர்பான மூன்று வழக்குகளில், 30 ஆயிரம் ரூபாய், சமையல் எண்ணெய் தொடர்பான இரு வழக்கில், 19 ஆயிரம் ரூபாய்.
பால் மற்றும் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தொடர்பான இரு வழக்கில், 8,000 ரூபாய், வெல்லம், உப்பு, பாக்கெட் குடிநீர் தொடர்பான தலா ஒரு வழக்கில் மொத்தம், 53 ஆயிரம் ரூபாய், இதர இரு வழக்கில், 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 2.10 லட்ச ரூபாய் அபராதம் மூலம், 18 சிவில் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. தவிர, 27 குற்ற வழக்குகளில், மூன்று வழக்குகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.