/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அன்னதானம், ரத்ததானம் ராகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்
/
அன்னதானம், ரத்ததானம் ராகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்
அன்னதானம், ரத்ததானம் ராகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்
அன்னதானம், ரத்ததானம் ராகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 20, 2025 01:20 AM
சேலம், சேலத்தில், காங்., முன்னாள் தலைவர் ராகுலின், 55வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். கோட்டை மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில், பாஸ்கர் உள்பட, 55 நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து குகை காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் பூஜை செய்து வழிபட்டனர். பொருளாளர் ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆத்துார் அரசு மருத்துவமனையில், ரத்ததான முகாமை, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தொடங்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட காங்., கட்சியினர் ரத்த தானம் வழங்கினர். நகர தலைவர் முருகேசன், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்., சார்பில், மாவட்ட தலைவர் திருமலைவாசன் தலைமையில் கட்சியினர், கோனுாரில், 20க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேட்டூர் அரசு மருத்துவமனையில், கட்சி நிர்வாகிகள் ரத்ததானம் வழங்கினர். ஐ.என்.டி.யு.சி., மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், நங்கவள்ளி வட்டார தலைவர் அருண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வேட்டி, சேலை
ஓமலுாரில், சேலம் மேற்கு மாவட்ட பொதுச்செயலர் கணேசன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் மணி, 10 பேருக்கு, வேட்டி, சேலை, காய்கறி வழங்கினார். காடையாம்பட்டி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதிகளிலும், காங்., கட்சியினர் ராகுல் பிறந்தநாளை கொண்டாடினர்.
தாரமங்கலத்தில், நகர தலைவர் சண்முகம் தலைமையில் கட்சியினர், சக்தி மாரியம்மன் கோவிலில் வழிபட்டு இனிப்பு வழங்கினர். வட்டார தலைவர் ரத்தினம், நகர பொறுப்பாளர்கள் மனோகரன், தட்சணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.