/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 15, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் :தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓமலுார் ஒன்றிய தலைவி கவுரி தலைமை வகித்தார். அதில், தமிழகத்தில் உள்ள, 50,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புதல்; ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு, 6,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.
இதில் ஒன்றிய செயலர் கண்ணகி, மாவட்ட, முன்னாள் பொருளாளர் அய்யாதுரை, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
பங்கேற்றனர்.