/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லிக்கட்டு விழாவுக்காக கூலமேட்டில் கால்கோள் விழா
/
ஜல்லிக்கட்டு விழாவுக்காக கூலமேட்டில் கால்கோள் விழா
ஜல்லிக்கட்டு விழாவுக்காக கூலமேட்டில் கால்கோள் விழா
ஜல்லிக்கட்டு விழாவுக்காக கூலமேட்டில் கால்கோள் விழா
ADDED : டிச 31, 2024 07:38 AM
ஆத்துார்: வரும் ஜன., 17ல், கூலமேடு கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்காக, கால்கோள் விழா நடந்தது.
ஆத்துார் அருகே, கூலமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு விழா நடந்து வருகிறது. இங்கு, சேலம் மட்டுமின்றி, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.
வரும் ஜன., 17ல், ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான விழாவுக்கு நேற்று, கால்கோள் விழா, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமையில் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலர் செழியன், விழா குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து வாடிவாசல், தடுப்பு கட்டை, காளைகள் வரும் வழி உள்ளிட்டவை அமைக்கும் இடத்தை துாய்மைப்படுத்தும் பணியில் விழா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.