/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கர்ப்பிணியுடன் கட்டாய திருமணம்; கணவர் புகாரால் போலீஸ் விசாரணை
/
கர்ப்பிணியுடன் கட்டாய திருமணம்; கணவர் புகாரால் போலீஸ் விசாரணை
கர்ப்பிணியுடன் கட்டாய திருமணம்; கணவர் புகாரால் போலீஸ் விசாரணை
கர்ப்பிணியுடன் கட்டாய திருமணம்; கணவர் புகாரால் போலீஸ் விசாரணை
ADDED : டிச 09, 2024 07:22 AM
வாழப்பாடி: பெண் கர்ப்பமான நிலையில், அவருடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக, அவரது கணவர், போலீசில் புகார் தெரிவித்தார்.
பெத்தநாயக்கன்பாளையம், சின்ன கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த, 25 வயது பெண்ணுக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் கர்ப்பமாக உள்ளது தெரிந்தது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த், 30, என்பவர் தான் காரணம் என, இரு நாட்களுக்கு முன், அப்பகுதி மக்கள் சேர்ந்து, அப்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும், அப்பெண்ணின் கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்றும் தெரிவித்து, விஜய் ஆனந்த் நேற்று வாழப்பாடி மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார், சம்பந்தப்பட்ட பெண் உள்ளிட்ட சிலரிடம் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'முதல்கட்ட விசாரணையில், பெண் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இதனால் ஏமாற்றப்பட்டாரா என விசாரணை தொடர்கிறது. விஜய் ஆனந்த், அவருக்கு சம்பந்தமில்லை என புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது' என்றனர்.