/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
யானையால் வாழை சேதம் வனத்துறையினர் விசாரணை
/
யானையால் வாழை சேதம் வனத்துறையினர் விசாரணை
ADDED : அக் 01, 2024 01:41 AM
யானையால் வாழை சேதம்
வனத்துறையினர் விசாரணை
மேட்டூர், அக். 1-
யானை மிதித்து வாழைகள் சேதமானது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்துார் ஒன்றியம், லக்கம்பட்டி ஊராட்சி, கீமியான்காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சக்கரையான். இவர் தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்திருந்தார். நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, வாழைகளை மிதித்து சேதப்படுத்தியது. மேலும், அருகிலுள்ள கிருஷ்ணன் நிலத்தில் புகுந்து சோளத்தட்டுகளை சேதப்படுத்தியது.
தகவல் அறிந்த மேட்டூர் வனத்துறை அலுவலர்கள், நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.