/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
5 யானைகள் தொடர் அட்டகாசம்விரட்ட வனத்துறையினர் திணறல்
/
5 யானைகள் தொடர் அட்டகாசம்விரட்ட வனத்துறையினர் திணறல்
5 யானைகள் தொடர் அட்டகாசம்விரட்ட வனத்துறையினர் திணறல்
5 யானைகள் தொடர் அட்டகாசம்விரட்ட வனத்துறையினர் திணறல்
ADDED : ஏப் 25, 2025 02:16 AM
ஓசூர்ஓசூர் அருகே, கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வரும், 5 யானைகளை வனத்திற்குள் விரட்ட முடியாமல், வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரி ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய, 5 யானைகள் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. நேற்று முன்தினம் காலை ஆழியாளம் கிராமத்தில் நுழைந்து, முட்டைகோஸ், ராகி பயிர்களை நாசம் செய்தன. ஓசூர் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும், அவை, வனப்பகுதிக்குள் செல்லாமல், கிராமங்களை நோக்கி திரும்புவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆழியாளம், போடூர்பள்ளம் பகுதிகளில் சுற்றித்திரிந்த, 5 யானைகளும் அன்றிரவு, சப்படிக்கு இடம் பெயர்ந்தன. அங்கு பயிரிடப்பட்டுள்ள மிளகாய், கொத்தமல்லி, தக்காளி, புதினா உள்ளிட்ட பயிர்களை கால்களால் மிதித்தும், தின்றும் நாசமாக்கின. வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'மிகுந்த சிரமத்துடன் கோடை கால உழவு செய்கிறோம். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் சானமாவு வனத்திலிருந்து வெளியேறும் யானைகள், பயிரை சேதப்படுத்துவதால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இது போன்று தொடர்ந்து நடக்காமல் இருக்க, இப்பகுதியிலுள்ள யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.