/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவசமாக மரக்கன்றை வழங்கி நட்டுக்கொடுக்கும் வனத்துறை
/
இலவசமாக மரக்கன்றை வழங்கி நட்டுக்கொடுக்கும் வனத்துறை
இலவசமாக மரக்கன்றை வழங்கி நட்டுக்கொடுக்கும் வனத்துறை
இலவசமாக மரக்கன்றை வழங்கி நட்டுக்கொடுக்கும் வனத்துறை
ADDED : மே 26, 2024 07:05 AM
ஆத்துார் : ஆத்துார் வன கோட்டத்தில் ஆத்துார், தும்பல், கல்வராயன்மலை, கெங்கவல்லி, தம்மம்பட்டி வனச்சரகங்கள்; சமூக காடுகள் திட்டத்தில் ஆத்துார், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் வனச்சரகங்கள் என, 8 வனச்சரகங்கள் செயல்படுகின்றன. தமிழக வனத்துறை சார்பில், பல்லுயிர் பாதுகாப்பு, பசுமையாக்கும் திட்டம் சார்பில் இலவசமாக மரக்கன்றுகளை நட்டுக்கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம் சமூக காடுகள் வனச்சரகம் சார்பில் மணிவிழுந்தான் ஏரி பகுதியொட்டி, 1.05 ெஹக்டேரில் நாற்று பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தேக்கு, சவுக்கு, மகாகனி, புங்கன், வேம்பு, பூவரசு, நாவல், இலுப்பை, பாதாம், அரசு, நீர் மருது, மந்தாரை, மகிழம், மஞ்சகடம்பு உள்பட, 15 வகை மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கும், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டுத்தரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆத்துார் சமூக காடுகள் வனச்சரகர் சரவணன் கூறியதாவது: பல்லுயிர் பாதுகாப்பு, பசுமையாக்கும் திட்டத்தில், 1.72 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மரக்கன்றை இலவசமாக வழங்குவதோடு, விவசாய நிலம், தொழிற்சாலை வளாகம், பள்ளி, கல்லுாரி வளாகங்களில் குழி தோண்டி நட்டு கொடுத்து வருகிறோம்.
மரம் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்தால், போதிய தண்ணீர் வசதி உள்ளதா என, கள ஆய்வு செய்து மரக்கன்று வழங்கப்படுகிறது. ெஹக்டேருக்கு, 200 மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. அத்தி, அரசு, ஆலம் மரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. காகித தொழிற்சாலைக்கு சவுக்கு மரத்தை சமீப நாட்களாக வாங்கிச்செல்கின்றனர். மகாகனி மரக்கன்றை, விவசாயிகள் ஆர்வமாக நட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.