ADDED : ஆக 01, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், சேலம் தெற்கு வனச்சரகம் பன்னிக்கரடு காப்புகாட்டில், வனத்துறைக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த செல்வகுமார், 65, ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று, தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், பொக்லைன் மூலம் நிலத்தை சமன்படுத்தி மீட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நட குழிகள் தோண்டப்பட்டன.

