sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு

/

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு


ADDED : நவ 19, 2024 05:14 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் அதை ஒட்டியுள்ள மலைப்ப-குதிகளில், மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து, வனத்துறை அதி-காரிகள், வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை பின்புறம் மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான கலியனுார், செட்டியார் காடு, ராயலுார் பகுதிகளில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதா-கவும், அதன் காலடித்தடம் பதிவாகி உள்ளதால், மலைக்-கோட்டை செல்லும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையா-கவும் இருக்க வேண்டும் என, சங்ககிரி பகுதிகளில் உள்ள பெரும்பாலான வாட்ஸ்ஆப் குரூப்களில் கடந்த, 15ல் தகவல் பர-வியது.இதையடுத்து, சேலம் சேர்வராயன் மலைப்பகுதி வனவர் தினேஷ், வனக்காப்பாளர் முத்துராஜா கடந்த, 15 இரவில் 'ட்ரோன்' கேமரா மூலம் சங்ககிரி மலைப்பகுதி, சுற்றியுள்ள பகுதி-களில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சின்-னாக்கவுண்டனுார் கிராமம், ராயலுார் மலையங்காடு பகுதியில் தங்கமுத்து என்பவரது தோட்டத்தில், பராமரிப்பு பணி செய்து வரும் சேட்டு, 70, என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு, மர்ம விலங்கால் கடிபட்டுள்ளது. பின்னர், வனச்சரக அலுவலர் துரைமு-ருகன், வனவர் தினேஷ், சங்ககிரி வருவாய் ஆய்வாளர் மலர்விழி, சின்னாகவுண்டனுார் கால்நடை மருத்துவர் அன்னக்கொடி ஆகியோர் சம்பவ இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். இதைய-டுத்து, மூன்று வன அலுவலர்கள் சம்பவ இடத்திலேயே தங்கி, கேமராக்கள் அமைத்து கண்காணிக்குமாறும், இன்று காலை ட்ரோன் மூலம் கண்காணிப்பதாகவும் வனச்சரக அலுவலர் துரை-முருகன் தெரிவித்தார். மேலும் அப்பகுதி மக்களிடம் எச்சரிக்கை-யாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us