/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனச்சரகர் முற்றுகை; மர்ம விலங்கை பிடிக்க 'கெடு'
/
வனச்சரகர் முற்றுகை; மர்ம விலங்கை பிடிக்க 'கெடு'
ADDED : செப் 11, 2024 07:09 AM
மேட்டூர்: தின்னப்பட்டி ஊராட்சியில் ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கை பிடிக்கக்கோரி, வனச்சரகரை விவசாயிகள் முற்றுகை-யிட்டனர்.
சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்-ளக்கரட்டூரில், கடந்த, 8ல் விவசாயி சுரேஷின் தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு, ஆட்டை கடித்து கொன்றது. நேற்று முன்-தினம் சென்ற மேட்டூர் வனத்துறை, மருத்துவ குழுவினர் பலி-யான ஆட்டை பரிசோதனை செய்தனர்.
கிராமத்துக்கு சென்ற அவர்கள், இரவில் வெளியே நடமாட வேண்டாம் என எச்சரித்து துண்டு பிரசுரம் வழங்கினர். நேற்று அதிகாலை அதே மர்ம விலங்கு ஆட்டை கடிக்க வந்துள்ளது. ஆடுகள் சத்தம் கேட்டு விவசாயிகள்
வந்ததால் தப்பி ஓடிவிட்-டது.இந்நிலையில் தின்னப்பட்டி விவசாயிகள் பலர், கொளத்துார் வனத்துறை சோதனைச்சாவடிக்கு நேற்று சென்றனர். அங்கு வந்த மேட்டூர் வனச்சரகர் சிவானந்தத்தை முற்றுகையிட்டு, 'ஆடுகளை சிறுத்தை கடித்து செல்கிறது.
அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்' என கூறினர். வனச்சரகர், 'ஆடுகளை கடித்தது எந்த விலங்கு என உறுதி-யானால் மட்டுமே கூண்டு வைப்போம்' என்றார். இதனால் இருத-ரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'ஒரு வாரத்தில் சிறுத்தையை பிடிக்காதபட்சத்தில் அனைத்து
விவசாயிகளும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்' என வனச்சரகரிடம் கூறினர். அவரும் கூண்டு வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறவே, விவசாயிகள் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.கூண்டு வைப்புதொடர்ந்து மதியம், 3:00 மணிக்கு வெள்ளக்கரட்டூரில் சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதியில் வனத்துறை சார்பில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அதன் உட்பகுதியில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்-தது. இதையடுத்து அங்கு சென்ற
மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து விவசாயிகளிடம் கேட்ட-றிந்தார். பின் வனத்துறையினர் வைத்துள்ள கூண்டை பார்வை-யிட்டு, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.