ADDED : ஜூலை 01, 2025 01:32 AM
சேலம், சேலம், குகை அருணாசலம் தெருவை சேர்ந்தவர் தனபால் தொழிலாளி, இவர் செவ்வாய்பேட்டை போலீசில், சில தினங்களுக்கு புகார் மனு அளித்திருந்தார். அதில், 'முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம் தனது வீட்டிற்குள்
அத்துமீறி நுழைந்து தன்னை தாக்கி மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், அத்துமீறி நுழைந்து மிரட்டியது தெரியவந்தது, இதையடுத்து, நேற்று செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜ், முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் ராமலிங்கம் மீது, 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் ஜே.எம். 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடல் நலன் கருதி சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தினமும் காலை, 10:00 மணிக்கு நீதிமன்றத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது.