sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முன்னாள் தலைவியின் கணவர் துணை பி.டி.ஓ.,விடம் வாக்குவாதம்

/

முன்னாள் தலைவியின் கணவர் துணை பி.டி.ஓ.,விடம் வாக்குவாதம்

முன்னாள் தலைவியின் கணவர் துணை பி.டி.ஓ.,விடம் வாக்குவாதம்

முன்னாள் தலைவியின் கணவர் துணை பி.டி.ஓ.,விடம் வாக்குவாதம்


ADDED : ஜன 09, 2025 07:45 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் ஒன்றியத்தில், 35 ஊராட்சிகள் உள்ளன. கடந்த, 5ல், ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிந்ததால், சிறப்பு அலு-வலர்கள் நியமனம் செய்து, அங்குள்ள பொருட்கள், ஆவணங்கள் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி திட்டச்சேரி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற, துணை பி.டி.ஓ., செல்வம், ஊராட்சி செயலர் அண்ணாதுரையிடம்(பொ), ஊராட்சி தொடர்-பான ஆவணங்களை கேட்டுள்ளார்.

அதில் குப்பை அள்ளும் ஒரு பேட்டரி வாகனம், ஊராட்சி முன்னாள் தலைவி ரேவதி வீட்டில் உள்ளதாக, செயலர் தெரிவித்-துள்ளார். அந்த வாகனத்தை ஒப்படைத்த பின், சிறப்பு அலுவலர் பணியை ஏற்பதாக, செல்வம் தெரிவித்துள்ளார்.

பின் லத்துவாடி ஊராட்சி அலுவலகத்துக்கு, செல்வம் சென்ற-போது, அங்கு வந்த ரேவதியின் கணவர் சுரேஷ், தகாத வார்த்-தையில் பேசி செல்வத்தை திட்டியுள்ளார். தொடர்ந்து அலுவல-கத்தில் இருந்து வெளியே செல்ல முடியாதபடி, சுரேஷ் வாக்கு-வாதம் செய்ததால், வீரகனுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார், செல்வத்தை மீட்டு அனுப்பி வைத்-தனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் நேற்று பரவியது.இதுகுறித்து தலைவாசல் பி.டி.ஓ., இளங்கோ(கி.ஊ.,) கூறு-கையில், ''இதுகுறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவல-ரிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us