/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க சைபர் கிரைம் தி.மு.க., மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
/
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க சைபர் கிரைம் தி.மு.க., மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க சைபர் கிரைம் தி.மு.க., மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க சைபர் கிரைம் தி.மு.க., மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : டிச 12, 2024 07:27 AM
சேலம்: வாக்காளர் பட்டியலில், 2, 3 இடங்களில் பெயர் இருப்பதாக கூறி நீக்கம் செய்ய, தி.மு.க.,வினர், தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுத்திருப்பர். பெயர் நீக்க, நவீன சைபர் கிரைம் நடக்கிறது. முதலில், அ.தி.மு.க.,வினர், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்-ளதா என உறுதிப்படுத்த வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
சேலம், அஸ்தம்பட்டி பகுதி, அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், சங்கர் நகரில் நேற்று நடந்-தது. அதில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: டங்ஸ்டன் பிரச்னை தொடர்பாக,
சட்டசபையில் இ.பி.எஸ்., சிறப்-பாக பேசியதாக, மக்கள் தெரிவித்தனர். தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை பலமடங்கு உயர்த்-தப்பட்டுவிட்டன. உலகில் எங்கும் இல்லாதபடி தமிழகத்தில் தான்,
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து, 3 பேர் இறந்துள்ளனர். இப்பிரச்னைக்கு எல்லாம் தீர்வு வேண்டும் எனில், வரும் சட்ட-சபை தேர்தலில், இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல்
பணியாற்ற வேண்டும்.வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் (அ.தி.மு.க.,வினர்) இருக்கும். ஆனால், 2, 3 இடங்களில் இருப்பதாக கூறி நீக்கம் செய்ய, தி.மு.க.,வினர், தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுத்தி-ருப்பர். இதை ஏன் நீக்க கூடாது என, ஒரு
நோட்டீஸ் அனுப்பிய-தாக சொல்வர். ஆனால் வராது. இது வரும் என உட்கார்ந்தி-ருந்தால் தேர்தல் வந்து விடும். அதனால் பெயர் நீக்க, நவீன சைபர் கிரைம் நடக்கிறது. முதலில், அ.தி.மு.க.வினர், வாக்காளர் பட்டியலில் பெயர்
இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அமைப்பு செயலர் சிங்காரம், மாநகர் மாவட்ட செயலர் வெங்க-டாஜலம், எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.பி., பன்-னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

