/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை மாரியம்மன் கோவில் விழா சத்தாபரண பூ பல்லக்கு ஊர்வலம்
/
கோட்டை மாரியம்மன் கோவில் விழா சத்தாபரண பூ பல்லக்கு ஊர்வலம்
கோட்டை மாரியம்மன் கோவில் விழா சத்தாபரண பூ பல்லக்கு ஊர்வலம்
கோட்டை மாரியம்மன் கோவில் விழா சத்தாபரண பூ பல்லக்கு ஊர்வலம்
ADDED : ஆக 12, 2025 01:31 AM
சேலம், சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி, நேற்று வாண வேடிக்கையுடன் சத்தாபரண பூப்பல்லக்கில், அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா கடந்த ஜூலை, 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம், உருளுதண்டம் ஆகியவை மூன்று நாட்கள் நடந்தன. கடந்த, 8ல் புதிதாக செய்யப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி, முதல் முறையாக திருத்தேரோட்டம் நடத்தப்பட்டது. விழாவின் நிறைவாக நேற்று காலை, 9:00 மணிக்கு, 1 டன் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில், மாரியம்மனை எழுந்தருள செய்து, கோவில் ராஜகோபுரம் முன்பு துவங்கி, தேர் செல்லும் வீதிகளில் வாண வேடிக்கை, குறவன் குறத்தி நடனம், சுவாமி வேடமிட்டவர்களின் ஆட்டம் பாட்டத்துடன் 'சத்தாபரண' ஊர்வலம் விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். மதியம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடத்தப்பட்டது. இன்று (ஆக.,12) பால்குட ஊர்வலம் மற்றும் அபிேஷகம் செய்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.