/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பி.டி.ஓ., அலுவலகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா
/
பி.டி.ஓ., அலுவலகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா
பி.டி.ஓ., அலுவலகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா
பி.டி.ஓ., அலுவலகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜூன் 02, 2025 06:44 AM
ஓமலுார்: ஓமலூர் ஒன்றிய அலுவலக கட்டடம், 1963 செப்., 18ல் திறக்கப்பட்டது. அக்கட்டடம் அடிக்கடி சேதம் அடைந்த நிலையில், சீரமைப்பு பணி மேற்கொண்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள், ஊழியர்கள், இடநெருக்கடியில் பணிபுரிந்தனர். இதனால், ஏற்கனவே நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில், புது அலுவலகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புது கட்டடம் கட்ட, 5.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் இன்று காலை ஓமலுார் ஒன்றிய அலுவலகத்தில், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், புது கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைக்கிறார். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.