sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதான 4 பேரை கஸ்டடி எடுத்து விசாரணை நில ஆவணங்கள், 1,110 அரிசி மூட்டைகள் பறிமுதல்

/

கைதான 4 பேரை கஸ்டடி எடுத்து விசாரணை நில ஆவணங்கள், 1,110 அரிசி மூட்டைகள் பறிமுதல்

கைதான 4 பேரை கஸ்டடி எடுத்து விசாரணை நில ஆவணங்கள், 1,110 அரிசி மூட்டைகள் பறிமுதல்

கைதான 4 பேரை கஸ்டடி எடுத்து விசாரணை நில ஆவணங்கள், 1,110 அரிசி மூட்டைகள் பறிமுதல்


ADDED : பிப் 07, 2025 04:12 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இரட்டிப்பு பணம் தருவதாக முதலீடு பெற்று மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் உள்பட, 4 பேரையும், கஸ்டடி எடுத்த போலீசார் அவர்கள் நடத்திய அறக்கட்டளைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

சேலம், அம்மாபேட்டையில், அன்னை தெரசா அறக்கட்டளை பெயரில் கூடை பின்னுதல், மெழுகு

வர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட இலவச பயிற்சி வகுப்புகள் வழங்-கப்பட்டன. ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவகம் நடத்தினர். அங்கு வரும் மக்களிடம் நல்ல முறையில் உறவு ஏற்ப-டுத்தி, அவர்களிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தரு-வதாக அறிவித்து, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது.

இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பொருட்கள், நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அறக்கட்-டளை தலைவி விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முக-மது ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனிடையே அம்மாபேட்டை போலீசில், சில நாட்களில், 300 பேர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் விஜயபானு உள்பட, 4 பேரையும், 3 நாள் காவலில் எடுத்து விசா-ரிக்க, கோவை டான்பிட் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்-படி நேற்று முன்தினம் சேலம் அழைத்து வந்தனர். டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர். நேற்று, 4 பேரையும், அறக்கட்டளை நடத்திய இடத்-துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது வாழப்பாடி, சூரமங்கலம் பகுதி

களில் பல கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கியது தெரிந்து, 4 நிலங்களின் ஆவணங்களை கைப்பற்றினர். அங்கிருந்த, 1,110 அரிசி மூட்டைகள், 2 டன் மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து முதலீட்டாளர், 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனே பொருளாதார குற்றப்-பிரிவு போலீசார், பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தால் விசா-ரித்து, சம்பந்தப்

பட்டோருக்கு பணம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us