/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நரிக்குறவர்கள் தர்ணா
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நரிக்குறவர்கள் தர்ணா
ADDED : செப் 21, 2024 06:50 AM
சேலம்: தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்க மாநில தலைவர் பீட்டர் ஆபோ தலைமையில் அவரது சமூக மக்கள், மனு கொடுக்க நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு தரைத்தள உள் வளாக நுழைவு பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி தர்ணாவை கைவிடச்செய்தனர்.பின் பீட்டர்ஆபோ கூறியதாவது:
வீரகனுார் டவுன் பஞ்சாயத்து நரிக்குறவர் காலனியில், 160க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்தனர். அவர்களுக்கு காமராஜர் ஆட்சியில் ஒதுக்கீடு
செய்யப்பட்ட நிலத்தை, பல்வேறு சமூகத்-தினர் ஆக்கிரமித்து வீடு கட்டிக்கொண்டனர்.
இதனால், 60 நரிக்குறவ குடும்பத்தினர் சொந்த வீடு இல்லாமல், சாலையோரம் குடிசைபோட்டு வாழ்கின்றனர். அதனால் ஆக்கிர-மிப்பை அகற்றி
நிலத்தை மீட்டு தர, ஆத்துார் ஆர்.டி.ஒ., அலுவல-கத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு
நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து கலெக்டரை சந்தித்து நரிக்குறவர்கள் முறையிட்டனர்.
அதற்கு அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அனை-வரும் கலைந்து சென்றனர்.