ADDED : ஜூலை 14, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி; வாழப்பாடி அரசு மருத்துவமனையில், 3.63 கோடி ரூபாய் செலவில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன், 3 அடுக்கு கொண்ட கட்டடம் கடந்-தாண்டு ஜூன் 12ல் திறக்கப்பட்டது. இந்நி-லையில் நேற்று, விபத்தால் இடது கழுத்து பட்டை எலும்பு முறிவு ஏற்பட்ட, கொட்ட
வாடியை சேர்ந்த ராமகிருஷ்ணன், 48, என்பவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார்.
அவரது இடது கழுத்து பட்டை எலும்பு முறிவை சரி செய்து, உலோக தகடு கொண்டு அறுவை சிகிச்சை நடந்தது. இதில், தலைமை மருத்துவர் ரமேஷ் குமார், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நித்யானந்த், பிரணவ், மயக்கவியல் மருத்துவர் அண்ணாதுரை உள்-ளிட்ட குழுவினர், வெற்றிகரமாக மேற்கொண்-டனர். 10 ஆண்டுக்கு பின் இங்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
