ADDED : ஜூலை 14, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; கிணற்றை எட்டி பார்த்த லாரி ஓட்டுனர், தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலுார் அருகே புதுார்காடம்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல், 54. லாரி ஓட்டுனர். மனைவி சுமதி, 50. இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று காலை, தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என எட்டி பார்த்துள்ளார். அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரது குடும்பத்தார் தேடிச் சென்ற போது, கிணற்றில் இறந்த நிலையில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ஓமலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
