/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணினி ஆப்ரேட்டர் சம்பளத்தை வேறு நபர் பெயரில் எடுத்து மோசடி?
/
கணினி ஆப்ரேட்டர் சம்பளத்தை வேறு நபர் பெயரில் எடுத்து மோசடி?
கணினி ஆப்ரேட்டர் சம்பளத்தை வேறு நபர் பெயரில் எடுத்து மோசடி?
கணினி ஆப்ரேட்டர் சம்பளத்தை வேறு நபர் பெயரில் எடுத்து மோசடி?
ADDED : அக் 01, 2024 07:10 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, வெள்ளரிவெள்ளி ஊராட்சியில், கணினி ஆப்ரேட்டரின் சம்பளத்தை வேறு நபர் பெயரில் எடுத்து மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, உதவி கலெக்டர் விசா-ரணை செய்துள்ளார்.
இடைப்பாடி ஒன்றியம், வெள்ளரிவெள்ளி ஊராட்சியில் எட்டு மாதங்களாக கணினி ஆப்ரேட்டராக பணியாற்றியவரின் சம்ப-ளத்தை, வேறு நபரின் பெயரில் எடுத்து மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, கணினி ஆப்ரேட்டராக பணியாற்-றிய தாமரை செல்வம் என்பவர், ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குனர் சங்கமித்திரைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்-பதாவது: நான் கடந்த ஆண்டு ஜூன், 30 முதல் இந்த ஆண்டு பிப்., 25 வரை எட்டு மாதங்கள் பணியாற்றினேன்.
இதுவரை சம்-பளம் தரவில்லை. எனக்கு பதிலாக, திருப்பூரில் உள்ள பாலி-டெக்னிக் கல்லுாரியில், ஆசிரியராக பணியாற்றி வரும் செந்தில்-ராஜா என்பவர் பெயரில் பணம் எடுத்துள்ளனர். விசாரணை நடத்தி தலைவர், ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து கடந்த, 26ல் சேலம் மாவட்ட உதவி கலெக்டர் ரேச்சல் கலைச்செல்வி விசாரணை நடத்தி உள்ளார்.