/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மோசடி; ஒன்றிய தலைவி குற்றச்சாட்டு
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மோசடி; ஒன்றிய தலைவி குற்றச்சாட்டு
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மோசடி; ஒன்றிய தலைவி குற்றச்சாட்டு
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மோசடி; ஒன்றிய தலைவி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. பா.ம.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவி சுமதி தலைமை வகித்தார். அதில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணன்: ராமிரெட்டிபட்டி ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி முடிந்து, 7 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதேபோல் ஊராட்சியில், 20க்கும் மேற்பட்ட வீடுகளில், 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. பி.டி.ஓ., ராமநாதன்: நடவடிக்கை எடுக்கப்படும்.சுமதி: ஒன்றியத்தில் உள்ள, 14 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்ட பணிகள் முழுமையாக முடிவு பெறவில்லை. அதேபோல் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க, புது பைப்லைன் அமைக்காமல் பழையதிலேயே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. இதையடுத்து கூட்டம் முடிந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.