/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேலை தருவதாக பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி
/
வேலை தருவதாக பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி
ADDED : மார் 17, 2024 02:08 PM
சேலம்: ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்த, 23 வயது பெண்ணுக்கு, ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி, ஒருவரிடமிருந்து வாட்ஸாப், டெலிகிராமில் தகவல் வந்தது.தொடர்ந்து, அந்த நபர், 10 முதல், 30 வினாடிகளில், 'ஸ்பாட்டிபை'யில் பாடலை கேட்டு 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து வேலையை பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார். அந்த பெண்ணும் அதன்படி செய்ய, சிறிது தொகையை பெற்றார். பின் அந்த நபர், ஒரு இணையதள முகவரியில் அதிக பணத்தை முதலீடு செய்யும்படி தெரிவித்தார். அதை நம்பி கடந்த பிப்., 20 முதல், 28 வரை, 13.69 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
அவர் லாபங்களை வழங்காமல், மேலும் முதலீடு செய்ய அறிவுறுத்தினார். அப்போது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், 13.69 லட்சம் ரூபாயை மீட்டுத்தருமாறு, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 9 இணைய தள கணக்குகள் குறித்து விசாரித்து, நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர்.

