/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு கட்டி தருவதாக மோசடி; ரூ.3.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
/
வீடு கட்டி தருவதாக மோசடி; ரூ.3.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
வீடு கட்டி தருவதாக மோசடி; ரூ.3.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
வீடு கட்டி தருவதாக மோசடி; ரூ.3.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
ADDED : நவ 29, 2024 07:33 AM
சேலம்: வீடு கட்டி தருவதாக கூறி வாங்கிய, 'அட்வான்ஸ்' தொகையை தராமல் ஏமாற்றிய நிறுவனத்துக்கு, அத்தொகையுடன், 3.10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம், தாசநாயக்கன்பட்டி, சவுடாம்பிகா நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர், சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் இயங்கும், 'தரண் ஹோம்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் சார்பில், மல்லுார், தேங்கல்பாளையத்தில், 33 லட்சம் ரூபாயில், 2,400 சதுரடியில் வீடு கட்டி தரப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது. அதை நம்பி, 2023, ஜூலையில், 3 லட்சம் ரூபாய், 'அட்வான்ஸ்' கொடுத்தேன். ஒப்பந்த காலத்தில் வீடு கட்டி ஒப்படைக்காததால், 'அட்வான்ஸ்' தொகையை திரும்ப கேட்டேன்.
அதற்கு நிலம் கொடுப்பதாக கூறி அலைக்கழித்து ஏமாற்றிவிட்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'நுகர்வோர் வழங்கிய, 3 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையுடன், முறையற்ற வணிக நடவடிக்கைக்கு இழப்பீடாக, 1.50 லட்சம், சேவை குறைபாட்டுக்கு, 1 லட்சம், மன உளைச்சலுக்கு, 50,000, வழக்கு செலவு, 10,000 என, 6.10 லட்சம் ரூபாயை, வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.